ஓம் ஸ்ரீம் அம் கும் காம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வராய நமஹ
குரு வந்தனம்
ஓம் ஆனந்த மாநந்த கரம் பிரசன்னம்
ஞான ஸ்வருபம் நிஜபோத ரூபம் யோகிந்தர மீட்யம்
பவரோக வைத்யம் ஸ்ரீ சத்குரும்
நித்யம் பஜாமி
காவி உடுத்திடாமல் கமண்டலம் எடுத்திடாமல்
காட்டிடை அலைந்திடாமல் காணலிடை நலிந்திடாமல்
பூவுலகம் தன்னை சுத்த பொய் என்றும் புகன்றிடாமல்
புறத்தொரு மதத்தினோரைப் புண்பட பேசிடாமல்
சேவைகள் செய்தற்போதும் தெய்வத்தை தெரிவோம் என்று
தெளிவுற காட்டினாய் உன் தினசரி வாழ்கைதன்னால்
தீவினை இருட்டை போக்கி ஜகமெல்லாம்
விளங்கும் ஆன்மிக யோக ஞான தீபமே
ஸ்ரீ கண்ணைய தேவனே போற்றி போற்றி போற்றி
–அருள்–



A few words about
OUR AUTHORS




யோகி ஸ்ரீ கண்ணையன் அவர்கள் குருசுவாமி தம்பதியினர்க்கு 29-05-1882 அன்று கோயம்பத்தூரில் அவதரித்தார். சிறு வயதிலேயே கடவுளை காண வேண்டும் என ஏக்கம் கொண்டிருந்த அவரை நீலமலை காடுகளின் நடுவே தனது ஆஸ்ரமத்தை அமைத்து கொண்டிருக்கும் ஸ்ரீ அகஸ்திய மாமஹரிஷி அவர்கள் ஆட்கொண்டார். கண்ணையனை தனது பிரதிநிதி மூலம் நீலமலையில் தனது ஆஸ்ரமதிற்கு அழைத்து வர செய்தார் .
18 ஆண்டுகள் அகத்திய மகரிஷியலும் புலிப்பாணி மகரிஷியலும் நான்கு வேதங்கள், 96 தத்துவங்கள், எல்லா மொழிகளின் வடிவ, ஒலி ரகசியங்கள், யந்திர, தந்திர , மந்திரங்கள் ஆக 64 கலைகள், அஷ்டமசித்திகளின் பெருக்கமான 512 சித்திகள் மகரிஷிகளால் கற்பிக்கப்பட்டது. அவருக்கு அளித்த அத்தனை பயிற்சிகளும் நேர்முக அனுபவ பயிற்சி.
கண்ணையன் மூலம் எண்ணற்றவர்கள் பூலோகத்தில் ஆன்மீக வளர்ச்சி பெற காத்து கொண்டிருக்கிறார்கள் என அகஸ்திய மகரிஷி அகக்கண்ணுற்றார். ஆதலால் அவரை பூலோக வாழ்கையை மேற்கொள்ளுமாறு கட்டளையிட்டார். ரிஷி பிரதிநிதி மூலம் மறுபடியும் கோயம்பத்தூரில் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
தாய் தந்தையின் வற்புறுத்தலுக்கு இணங்க திருமணத்திற்கு தலை அசைத்தார்.இரு மகவுகளுக்கு தந்தையுமானார். குடும்பத்தோடு சென்னை மாநகரத்தில் உள்ள சூளைக்கு இடம் பெயர்ந்தனர். திடீரென தந்தை இறக்கவே தனது தந்தையின் தொழிலான நாடி ஜோதிடம் செய்ய நேரிட்டது. காலச்சக்கர வசத்தால் குருநாதரின் தாயார், துணைவியார் இருவரும் இவரை பிரிந்து விண்ணுலகம் சென்று விட்டனர்.
தனக்களிக்கப்பட்ட பணியான யோக வித்தையை உலகெங்கிலும் பரப்ப அடிக்கடி வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருந்தது. தனது இரு மகவுகளை பேணி காக்க வேண்டி இருந்ததால் தனது குருநாதரின் அறிவுரையின்படி இரண்டாவது மணம் நடந்தேறியது. வாழ்கையில் எல்லா பொறுப்புகளையும் இனிதே நிறைவேற உதவியவர்கள் இவரது சீடர்களும் மாணவர்களும் தான்.
பௌதீக வாழ்கையை தொடர ஆசிரியர் தொழிலை மேற்கொள்ள முடிவு செய்து பண்டிட் பட்டம் பெற முற்பட்டார். பச்சையப்பன் கல்லூரியில் பண்டிட் தேர்வுக்கான வகுப்பை ஓர் வைணவ ஆச்சாரியார் நடத்தி வந்தார். தன்னையும் தேர்வுக்கு பயில்விக்க கண்ணையன் அவரை வேண்டிய பொழுது , இராமாயண இதிகாச வகுப்பை நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர் , “உன்னால் பண்டிதன் ஆக முடியாது” என் கடும் சொற்களால் சாடி வெளியே போகுமாறு கூக்குரலிட்டார். மறுநாளும் ஆச்சரியாரை நாட அதே கடும் சொற்கள் மீண்டும் ஒலித்தது. கண்ணையன் மௌனமாக வெளியே நின்று கொண்டிருந்தார். ஆசிரியர் தான் நேற்று நடத்திய கம்ப ராமாயணத்தின் விளக்கத்தை கேட்க அனைத்து மாணவர்களும் பதில் கூறாது விழிக்க, ஆசிரியரின் கண்கள் சிவந்தன. இத்தருணத்தில் கதவருகில் நின்ற கண்ணைய யோகி “நான் சொல்லட்டுமா ?” என்று பணிவுடன் கேட்டார். சினத்தின் எல்லையில் இருந்த ஆச்சாரியார் கொதித்தெழுந்து ” நீயா..? சொல்லு.. சொல்லு பார்க்கலாம் ..” என்று கர்ஜித்தார். கண்களை மூடிய வண்ணம் ஞான ஒளி கண்டு கம்பராமாயண செய்யுட்களை வரி பிசகாமல் அப்படியே மடை திறந்த வெள்ளம் போல் செப்பி முடித்தார். ஓடி வந்து கண்ணையனை கட்டி பிடித்து ஆனந்த கண்ணீர் வடித்தார் ஆச்சாரியார். தேர்வுக்கான கட்டணத்தை தானே ஏற்று தன் மாணவனை “பண்டிட்” ஆக்கினார்.
ரிக் முதல் அதர்வண வேத மந்திரங்கள் மற்றும் இதிகாச, புராண சம்பவ நிகழ்சிகளின் போது அருளப்பட்ட ஸ்தோத்திரங்கள், உயிரினங்களின் உள்ளும் புறம்பும் அண்டத்தில், ஆகாயப்பரப்பில் ஒலியலையென செய்யும் ஜால வித்தைகள் , ஆரம்ப கீர்வனத்திலிருந்து , எல்லா மொழிகளிலும் புதைந்து கிடக்கும் ரகசியங்களை தன் நூல்களில் சொற்பொழிவுகளில் வெளியிட்டவை ஏராளம். ஓர் ஓரின எழுத்து முதல் எழுத்து கோர்வைகளை ஓத செய்து தன் மாணவ சீடர்களுக்கு அவற்றின் வடிவம், சக்தி, நிறம், அலைகழிவு, ஆர்ப்பாட்டம் போன்ற விஞ்ஞான விளக்கங்களை பரிசோதனை வாயிலாக ஆக்கபூர்வமாக அறியச்செய்த தெய்வான்மீகர் இவர்.
அன்றாட வாழ்கையில் காலையில் கண் விழித்தது முதல் பல் தேய்க்க, நாவை வழிக்க, உத்தியோக உயர்வு, வியாபாரம் சிறக்க, அகால மரணம் தவிர்க்க, அறிவு வளர , ஆயுள் நீள, ஆர்வம் நிலை பெற, கடன்கள் மறைய, உறவு – பகை மாற, எண்ணும் காரியங்களில் வெற்றி பெற, எஜமானர்களின் மதிப்பை பெற, ஏவல் தோஷங்கள் மறைய , கெடுமதி ஆவிகள் ஓட, பயம் நீங்க, கர்ப தோஷங்கள் அகல, கர்ப்பம் உண்டாக-ரட்சிக்க, கல்யாணம் ஆக, தொலைந்து போனவர்களை – போனவைகளை மீட்க, கீர்த்தி உண்டாக, கெட்ட கனவுகள், குணங்கள் மாற, கிரக பீடைகள் நீங்க, அருள் பெற, செல்வம் பெற, சௌபாக்கியம் உண்டாக, கணவன் மனைவி அன்புடன் வாழ, கீர்த்தி பெற, ஞானம் பெற, ஆன்மிக தடைகள் நீங்க, பாண்டியத்துவம் பெற, பாவங்கள் விலக, ஊர்வன பயம் நீங்க, மழை வரவழைக்க-தடுக்க, பலம் பெற செப்பிடும் மந்திரங்கள் – பௌதீக இன்ப வாழ்க்கைக்கு ஏதுவான இது போன்ற முடிவில்லா நீண்ட கலியுக சித்திகளின் வானுயர்வு அடுக்கு மாடி மந்திர கட்டடத்திற்கு சொந்தகாரர் இவர் என்றால் மிகை ஆகாது.
காஞ்சி காமாட்சி அம்மனின் அருளாசி பெற்று காஞ்சியின் கண் கண்ட தெய்வமாக விளங்கிய ஸ்ரீ சந்திரசேகர பரமாச்சாரியாரை பல்லக்கில் அமரச்செய்து அம்பதூரிலிருந்து குருநாதரின் வீட்டை கடக்கும் கணத்தில் ” நில்லுங்கள்” என்று பல்லக்கை சுமந்த பக்தர்களிடம் கூற, அவருடைய தீர்கப்பார்வை குருநாதரின் பூஜை அறையை நோக்கி சென்றது… இது வீடு அல்ல.. சாட்சாத் அம்பாள் அருள் பாலிக்கும் ஆலயம் எனக்கண்டார். மானச வழிபாட்டிற்கு பின் , சிறிது நேரம் கழித்து தன் பயணத்தை தொடர்ந்தார். தன் தெய்வான்மீகபணிகளை முடித்து பரமாச்சாரியார் திரும்பிய வேளையிலும் இதே காட்சி நீடித்தது. பூஜை அறையில் இருந்த குருநாதரும் பரமாச்சாரியாரின் சக்தி தரிசனத்தை உணர்ந்தார். இவர்கள் தெய்வ கடாட்சம் எங்கெல்லாம் நிறைந்திருக்கிறது என உணர்ந்தவர்கள்.
நமது குருநாதரின் பிரதம சீடர்களில் ஒருவரான சிறப்பு தீட்சை பெற்ற திரு ஆர் .கே. முருகேசு, ஸ்ரீலங்கா அவர்கள், பௌர்ணமி தியானம் முடிந்து மொட்டை மாடியில் (குரு நாதர் அங்கேயே இருந்ததால் குளிரையும் பொருட்படுத்தாது ஓர் ஓரத்தில் உறங்க ஆரம்பித்தார். திடீரென்று “தெய்வ ஒளிக்கதிர்கள் அவர் கண்களில் பாய்ந்தன. யாரும் காண முடியாத கந்தர்வ காட்சியை கண்டார். ரிஷிகள் கூட்டம் நம் குருநாதரின் முன் அமர்ந்திருந்தது. ஏதோ ஒன்றினை காண்பித்து விளக்கம் கேட்க, ஸ்ரீ கண்ணைய தேவன் பதிலுரைத்துகொண்டிருந்தார். ரிஷிகளின் தரிசனம் அவர்களின் ஞான ஒளி கிரணங்கள் இவருக்கு அருள் பாலித்து கொண்டிருந்ததன. அவர் தான் பின்பு ஸ்ரீலங்காவின் ஆன்மிக அரசாக விளங்கிய சுவாமி ஆர்.கே.முருகேசு . மக்கள் கூட்டத்தை அகர்ஷணிக்கும் ஸ்ரீலங்காவின் தெய்வான்மீக விடிவெள்ளியாக பிரகாசித்தார்.
மும்பையில் நடை பெற்ற அகில உலக யோகியர் மாநாட்டில் யோகம் குறித்து நீண்டதொரு சொற்பொழிவாற்றினார். பாண்டிச்சேரியில் வாழ்ந்த சுவாமி கீதனந்த நடத்திய அகில உலக யோகியார் மாநாட்டில் ” யோகா மகாரத்னா” என்ற பட்டதை நமது குருநாதருக்கு அளித்து பெருமை சேர்த்து கொண்டது.
ஒரு சமயம் சென்னை திருமுல்லைவாயிலிலுள்ள ஈஸ்வரன் கோவிலில் உச்சிகால பூஜை நடந்து கொண்டிருந்த போது சிவனுக்கு நெய்வேதியம் முடிந்ததும் அதனை சிவனடியார்க்கு கொடுப்பது கட்டாய வழக்கம். அன்று இராமலிங்க அடிகளார் தனது சீடர்களுடன் அங்கே வர நெய்வேத்தியம் சீடர்களுக்கு கொடுக்க படவில்லை. சீடர்களின் பசியை போக்காததால் அடிகளார் கோவிலுக்கு சாபமிட்டார். பிற்காலத்தில் அவ்வூர் மக்கள் நம் குருநாதரை அணுகி பாவ விமோசனம் செய்விக்கப்பட்டு அக்கோயில் புத்துயிர் பெற்றது.
“ஏகம் சத்” என்ற பரம்பொருள் ஒன்றிருக்க, குடும்ப வாழ்வில் ஈடுபட்டிருக்கும் கிரஹஸ்தர்களும் எல்லா தேவ தேவியர்களிடமிருந்து அருள் பெரும் ரகசிய முறைகளை அவரவர்களுக்கு தகுந்தபடி ஆக்கி கொடுத்தார். அது மட்டுமல்ல தன தாய் மாமனுக்கு திருப்தி வேங்கடஜலபதியை நேர்முக தரிசனம காண செய்தவர்.
நீலகிரி மலைகாடுகளிருந்து திரும்பி வந்த சமயம், நமது சுவாமிகள் சென்னைக்கு வர வேண்டியிருந்தது. பௌதீக உலகில் இயங்கும் புது கண்டுபிடிப்புகள், அவற்றின் இயக்கங்களை, தான் கற்ற வித்தைகளுடன் நேர்முகமாக ஒப்பிட்டு கொள்வது அவரின் இயல்பாக இருந்தது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சென்று நீராவி ரயில் இஞ்சின் எவ்வாறு இயங்குகிறது என்று பார்க்க முற்பட்டார். அவ்வமயம் எஞ்சின் இணைக்கப்பட்டு ஒரு ரயில் வண்டி தொடர் பிளாட்பாரத்திலிருந்து புறப்பட தயார் நிலையில் இருந்தது. (பிளாட்பார அனுமதி சீட்டு அந்நாளில் வழக்கு முறையில் இல்லை) பயணசீட்டு பரிசோதகரை அணுகி, தான் பிளாட்பாரம் சென்று ஓரிரு நிமிடங்களில் இன்ஜினை பார்த்து விட்டு வந்து விடுவதாக வேண்டினார். அதற்கு பயணச்சீட்டு பரிசோதகர் அவரை கடும் சொற்களால் பேசி அவரை வெளியே நிற்க வைத்துவிட்டார். . அங்கேயே நின்று கொண்டிருந்த சுவாமிகள் விண்ணப்பித்து கொண்டே இருந்தார். பத்து நிமிடங்கள் ஆயின. கார்ட் விசில் கொடுத்து பச்சை கொடியை காட்டினார். ரயில் புறப்பட ஆரம்பித்தது. சுவாமிஜியின் பார்வை இன்ஜினை நோக்க இஞ்சின் இயக்க நிலையை இழந்தது. ஆம் இரயில் நின்று விட்டது. இஞ்சின் டிரைவர் எவ்வளவு முயன்றும் வண்டி ஓடவில்லை. நிலைய அதிகாரிகள், மெகானிக்குகள் ஓடி வந்து இன்ஜினை இயக்க முற்பட்டார்கள். முடியவில்லை. இந்த காட்சி 30 நிமிடங்கள் தொடர்ந்தது. சுவாமிஜி டிக்கெட் பரிசோதகர் அருகிலேயே நின்று கொண்டிருந்தார் . இந்நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்த ரயில்வே நிர்வாக ஊழியர் ஒருவர் சுவாமிஜியை நோக்கினார். இவர் ஒரு சாதாரனமானவர் இல்லை என்று உணர்ந்து, டிக்கெட் பரிசோதகரை அணுகி, பிளாட்பாரத்தில் அனுமதிக்குமாறு வேண்டினார். டிக்கெட் பரிசோதகரும் அனுமதிக்க, இன்ஜினின் இயக்கத்தை கண்டபின் மனக்கட்டுப்பாட்டை தளர்த்தினார். இன்ஜினும் இயங்க ரயிலும் புறப்பட்டது. பின் தான் தங்கி இருந்த அறையை அடைந்ததும் கோபக்கனல் தெறிக்க குருவின் தரிசனம் கிடைத்தது. இவருடைய சித்து விளையாட்டை உணர்ந்த புலிப்பாணி மகரிஷி ” சித்தா விளையாடினாய் ? உன்னால் 30 நிமிடங்கள் ரயில் வண்டி தாமதமாக சென்று அடையும். அதனால் மக்கள் அவதிக்கு உள்ளாவார்கள்” என்று கண்டித்து ” இனி சித்து விளையாடுவதை நிறுத்து” என்று ஆணையிட்டார்.
இது போன்று இன்னும் குருநாதரின் வாழ்கையில் ஏற்பட்ட ஏராளமான அற்புத நிகழ்வுகள், அவரது யோகா, ஞான, மூலிகை பயிற்சிகள், மந்திர, யந்திர, வித்தைகள், அவரது புத்தக தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
02-12-1990 அன்று – கார்த்திகை மாதம் ஞாயிற்று கிழமை, பிரம்ம முகூர்த்தத்தில், பௌர்ணமியில் அண்ணாமலை கார்த்திகை தீப திருநாளில். உடலில் இருந்து நிரந்தரமாக வெளி வந்து , மாலை சந்தியா காலத்தில் அம்பத்தூரில் இருந்து திருவண்ணாமலை மகா தீபம் நோக்கி, ரிஷிகள், சித்தர்கள், யோகிகள், தண்ணொளி ஈந்து முன் செல்ல, தேவர்கள், கண நாயகர்கள் பின் தொடர்ந்து பொற்கமலங்கள் தூவிய வண்ணம் புகழ் பாடி அழைத்து சென்று விட்டனர். இவர் பயன்படுத்திய அனைத்து பொருள்களும் இன்றும் சபையில் இருக்கிறது. இவர் ஒரு ஜீவன் முக்தர். தன்னை நினைக்கும் பக்தர்களுக்கு எல்லா உலகங்களிலும் காட்சி தந்து, அருளும் வரம் நல்க பெற்றவர். பக்தி சிரதையுடன் வழிபடுங்கள். அருள் கிட்டும். இராமாயண சுந்தர காண்டத்தை , சுவாமிஜி அருளிய விளக்கம் நல்கிய ” பிரம்ம ப்ராப்தி” யை ரிக்-யஜுர்-சாம வேதத்தில் அருள் கேட்கும் மந்திரங்களை பாராயணம் செய்தால் என்ன பேறுகள் கிட்டுமோ அதே பேறுகளை உத்தம உண்மை யோகியாரின் சரிதத்தை படிப்பவர்களுக்கும் கிடைக்க என் தெய்வ குருநாதரையும், ஸ்ரீ காயத்ரி தேவியையும், ஸ்ரீ ராஜா ராஜேஸ்வரியையும் இரு கரங்கூப்பி , மனமார வேண்டுகிறேன்.
Coming Soon …
Coming Soon …
Member of American Metaphysical Doctors Association Doctor Degree Graduate Member
Member of Intl. Naturopathic Asscn. (U.S.A)
Graduate Member, International Nutritionist Association Certified Hypnotherapist (U.S.A)
Regd. Spiritual Healing Practitioner (U.S.A)
Certified Colour Therapist (U.K)
Certified Psychologist
Reiki Master
பேராசிரியர் டாக்டர் காதர் இபுராஹீம் A R
மனோவியல், சத்துணவு மற்றும் மன விஞ்ஞான ஆய்வாளர்
மனவியல் , சத்துணவு மற்றும் அதீத மனவியல் ஆகிய மூன்று துறைகளில் டாக்டர் பட்டம் (ph.d) பெற்ற ஒரே மலேசிய இந்தியர் . மூளையில் (Brain Engineering), இருதய பாஷை (Telepathy), வர்ண சிகிச்சை (Color Theraphy) , சூட்சும ஒளி வட்டம் (Spiritual Aura) என அற்புத விஷயங்களை தாய் மொழியில் மலையிசிய மக்களுக்கு அறிமுகப்படுத்தி பயிற்சி வகுப்புகளையும் நடத்திய பெருமைக்கு உரியவர்.
நம் நாடு தவிர சிங்கப்பூர், மியன்மார், இந்தியா , லண்டன் ஆகிய நாடுகளில் பல கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிகளை நடத்தி வருகிறார். இந்திய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று அரசாங்க காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு விசேஷமாக பயிற்சிகள் நடத்தியவர். உலகில் முக்கிய எட்டு பல்கலைகழகங்களின் பேராசிரியராகவும் அங்கீகரிக்கப்பட்டவர்.
மலேசிய இந்திய கைதிகளுக்காக தன்னம்பிக்கை மற்றும் மனவியல் சிறப்பு பயிற்சிகள் நடத்த அரசாங்கத்தின் சிறை மற்றும் சீர்திருத்த துறையால் (Jabatan Penjara & Pusat Pemulihan Akhlak, Malaysia) நியமக்கபட்ட ஒரே இந்திய மனவியலாளர் இவர். வழி தவறிய பல இந்திய இளைஞர்களின் வாழ்க்கையை சீர்திறுத்துவதை சேவையாக எண்ணி இலவசமாகவே இப்பயிற்சிகளை நடத்தியும் வருகிறார்.
மாணவர்களுக்காக நடத்தப்படும் பயிற்சிகளில் மனவியல் அணுகு முறைகளை இணைத்து போதனை முறையில் மாற்றத்தை உருவாக்கியவர், ‘செய்முறை பயிற்சிகளை’ (Demonstration) இணைத்து மேடை நிகழ்சிகளுக்கு புதிய தோற்றத்தையும் தந்தவர். மேடை பேச்சுகளின் வழி பல்லாயிரக்கணக்கான மக்களின் சிந்தனையில் ஆரோக்கியத்தை பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கியவர்.
--அருள்--
